அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் புகழாரம்.

Published Date: October 9, 2024

CATEGORY: CONSTITUENCY

மனித நேயத்துடன் சேவை செய்யும் தமிழக அரசு -அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் புகழாரம்

மதுரையில் ஒத்தக்கடையில் நடந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  ரூபாய் 2,735 கோடியில் வங்கி கடன் இணைப்புகள் 12,233 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர்                பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், 'தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கத்திற்கும், அரசாங்கத்திற்கும் மனிதநேயம் என்ற மிக முக்கியமான குணம் இருக்க வேண்டும். அந்த மனிதநேயத்துடன் பொருளாதாரத்தில் வாழ்க்கை முறையில் பின் தங்கிய மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை செய்து வருகிறது. இதுவரையிலும் எந்த அரசும் செய்திடாத சாதனைகளை முதல்வர்      மு.க ஸ்டாலின் செய்து காட்டி வருகிறார். மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது' என்றார்.

Media: Dinakaran